தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறப்பு ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - தூத்துக்குடி மைசூர் சிறப்பு ரயில்

தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடியிலிருந்து மாலை 04.25 மணிக்கு புறப்பட்ட வண்டி, மாலை 05.15 மணிக்கு புறப்படும்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

tuticorin mysuru special train rescheduled
tuticorin mysuru special train rescheduled

By

Published : Aug 27, 2021, 4:26 AM IST

மதுரை: தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் குறித்து மதுரை ரயில்வே கோட்டம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை தூத்துக்குடியிலிருந்து மாலை 04.25 மணிக்கு புறப்பட்ட வண்டி எண் 06235, தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் மாலை 05.15 மணிக்கு புறப்படும் படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல இந்த ரயில் வாஞ்சி மணியாச்சியிலிருந்து மாலை 05.45 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து மாலை 06.15 மணிக்கும், சாத்தூரிலிருந்து மாலை 06.35 மணிக்கும், விருதுநகரில் இருந்து இரவு 07.00 மணிக்கும், திருமங்கலத்தில் இருந்து இரவு 07.23 மணிக்கும், திருப்பரங்குன்றத்தில் இருந்து இரவு 07.35 மணிக்கும், மதுரையில் இருந்து இரவு 07.45 மணிக்கு பதிலாக இரவு 08.05 மணிக்கும், சோழவந்தானில் இருந்து இரவு 08.25 மணிக்கும், கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திலிருந்து இரவு 08.45 மணிக்கும், திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 09.25 மணிக்கும் புறப்படும்படி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்தியோதயா சிறப்பு ரயில்

வண்டி எண் 06192 நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா சிறப்பு ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து பத்து நிமிடங்களுக்கு முன்னதாக புறப்படும்படி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ரயில் திருநெல்வேலியிலிருந்து 05.15 மணிக்கு பதிலாக மாலை 05.05 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் கோவில்பட்டியிலிருந்து மாலை 6 மணிக்கும், விருதுநகரிலிருந்து மாலை 06.40 மணிக்கும், மதுரையில் இருந்து இரவு 07.55 மணிக்கும் திண்டுக்கல்லில் இருந்து இரவு 09.10 மணிக்கும் புறப்படும்படி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வண்டி எண் 06066, நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மும்முறை செலுத்தப்படும் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து மாலை 06.20 மணிக்கு பதிலாக மாலை 05.50 மணிக்கு புறப்படும் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details