தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய் விவகாரம்: மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவு - madurai district news

திருச்சி உய்யக்கொண்டான் கால்வாயில் எந்தவிதமான கழிவுகளும் கலக்காத வகையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல்செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

trichy-uyyakkondan-canal-issue
trichy-uyyakkondan-canal-issue

By

Published : Aug 10, 2021, 9:45 AM IST

மதுரை: திருச்சி இந்திரா நகரைச் சேர்ந்த ராஜகோபால் உயர் நீதிமன்ற மதுரைக்கிடையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருச்சி மாவட்டத்தில் இரண்டு வார கால ஊரடங்கைப் பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல்செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், துரைசாமி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போது மூன்றாம் அலை தொடங்கவிருப்பதாகக் கூறுவதால், அதனைக் கருத்தில்கொண்டு மனுவை விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்தனர்.

மேலும், திருச்சி உய்யக்கொண்டான் கால்வாயில் எந்தவிதமான கழிவுகளும் கலக்காத வகையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details