தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Jai Bhim Movie Impact: தங்கள் முறைப்படி நன்றி தெரிவித்த பழங்குடியினர்

தங்களது குறைகளை அறிந்து கொண்டு அவைகளை நிவர்த்தி செய்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக நாடோடிகள் பழங்குடி கூட்டமைப்பினர் பூம்பூம்மாடு, பாம்புகளோடு தங்கள் முறைப்படி நன்றி தெரிவித்தனர்.

தங்கள் முறைப்படி நன்றி தெரிவித்த பழங்குடியினர்
நாடோடிகள் பழங்குடி கூட்டமைப்பினர் தங்கள் முறைப்படி நன்றி தெரிவித்தனர்

By

Published : Nov 22, 2021, 6:18 PM IST

Updated : Nov 22, 2021, 7:55 PM IST

மதுரை: நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் (Jai Bhim) திரைப்படத்தில் நாடோடிகள், பழங்குடியின மக்களின் வாழ்க்கை இன்னல்களை பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தைப் பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், நாடோடி பழங்குடி மக்களை தேடிச் சென்று அரசு உயர் அலுவலர்களின் மூலம் அவர்களது குறைகளை அறிந்து நிவர்த்தி செய்ய ஆணையிட்டார்.

நாடோடிகள் பழங்குடி கூட்டமைப்பினர் தங்கள் முறைப்படி நன்றி

அதனடிப்படையில் அலுவலர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து வருவதாகவும், ஜெய்பீம் படம் மூலம் தங்களது இன்னல்களை சுட்டிக்காட்டிய நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.

இதையடுத்து, படத்தை பார்த்து உடனடியாக தங்களது குறைகளை களைய நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து பதாதைகளை ஏந்தி பூம்பூம் மாடு மற்றும் பாம்புகளோடு தமிழக நாடோடிகள் பழங்குடி அமைப்பினர் கோஷங்கள் எழுப்பினர்.

இதையும் படிங்க: எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி - 'ஜெய் பீம்' சூர்யா

Last Updated : Nov 22, 2021, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details