தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறு, குறு தொழிலை மேம்படுத்த முக்கிய நகரங்களில் ரயில்களை நிறுத்த ஏற்பாடு!

சிறு தொழில் முனைவோர்களுக்கு வசதியாக, அவர்களது வணிக பொருள்களை அனுப்புவதற்கு முக்கிய தொழில் நகரங்களில் மதுரையிலிருந்து கிளம்பும் விரைவு ரயில்கள் 5 நிமிடம் நிறுத்தப்படும் எனத் தென்னக ரயில்வேவின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

trains to stop main business hub stations
trains to stop main business hub stations

By

Published : Jan 29, 2021, 6:42 AM IST

மதுரை: தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “பயணிகள் ரயில்களில் சிறிய ரக பார்சல்கள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தற்போதைய விதிமுறைகளின்படி விரைவு ரயில்களில் பார்சல்கள் ஏற்றப்பட வேண்டும் என்றால் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ஐந்து நிமிட கால நிறுத்தம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவது வழக்கம்.

எனவே, சிறுதொழில் முனைவோர், தங்கள் உற்பத்திப் பொருள்களை அனுப்புவதற்கு வசதியாக மதுரை கோட்டத்தில் இயங்கும் 6 விரைவு சிறப்பு ரயில்களுக்கு முக்கிய தொழில் நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் ஐந்து நிமிட நேரம் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி,

  • வண்டி எண் 02662 செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06235 தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் ஆகியவை விருதுநகர் ரயில் நிலையத்திலும்
  • வண்டி எண் 06182 செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிலம்பு விரைவு ரயில் ராஜபாளையம் ரயில் நிலையத்திலும்
  • வண்டி எண் 02694 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் முத்துநகர் சிறப்பு ரயில் சாத்தூர் ரயில் நிலையத்திலும்
  • வண்டி எண் 06724 கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி சிறப்பு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலும்
  • வண்டி எண் 02652 பாலக்காடு - சென்னை சென்ட்ரல் ரயில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்திலும்

ஐந்து நிமிட நேரம் நின்று செல்லும். இந்த சிறப்பு நிறுத்த ஏற்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details