மதுரை:திருமங்கலம் ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலைகள் நடைபெறுகின்ற காரணத்தால் ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வண்டி எண் 02628 திருச்சி-திருவனந்தபுரம் பகல் நேர சிறப்பு ரயில் முழுமையாக ரத்துசெய்யப்படுகிறது. வண்டி எண் 06321/06322 நாகர்கோவில்-கோயம்புத்தூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில், திருநெல்வேலி - திண்டுக்கல் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
இன்று (மார்ச் 31) திருநெல்வேலி, நாகர்கோவிலிலிருந்து புறப்பட்ட வண்டி எண் 06072 திருநெல்வேலி - தாதர் சிறப்பு ரயில், வண்டி எண் 06340 நாகர்கோயில் - மும்பை சி.எஸ்.டி. சிறப்பு ரயில் ஆகியவை திருவனந்தபுரம் சோரனூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
நேற்று (மார்ச் 30) திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட வண்டி எண் 06343 திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா சிறப்பு ரயில், இன்று மதுரையிலிருந்து புறப்படும் வண்டி எண் 06344 மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரயில் ஆகியவை திண்டுக்கல் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது எனத் தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:தென் மாவட்ட ரயில்கள் தாமதம்: தென்னக ரயில்வே அறிவிப்பு