மதுரையில் உள்ள அரசு இராசாசி மருத்துவமனையில் விரிவாக்க கட்டடத்தின் எதிரே இயங்கிவரும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றுவரை 90 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று கூடுதலாக ஒருவர் அத்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போதுவரை மொத்தம் 91 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில், 43 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.