இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வுக்கழகத்தை (NIPER ) மதுரையில் அமைப்பது தொடர்பான கடிதங்களை வழங்கி, திட்டத்தை தொடங்குவதற்கான சாத்தியகூறுகள் குறித்தும், விரைந்து தொடங்கவேண்டிய தேவை குறித்தும் உரம் மற்றும் ரசாயனத்துறை செயலாளர் அபர்னா, நிதித்துறை செயலளர் சோமநாதன் ஆகியோரை சந்தித்துப் பேசினேன்.
ஒன்றிய ரசாயனத் துறை செயலாளரிடம் கோரிக்கை
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்திற்காக மதுரையில் 2012ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்திற்கு முன்நுழைவு அனுமதிக்கான சான்று மட்டுமே தரப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்நிலம் கழகத்தின் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்படாமலே உள்ளது. அதற்கான விண்ணப்பமும் மருந்தியல் கழகம் சார்பில் இதுவரை தரப்படவில்லை.