மதுரை:சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு தமிழ்நாடு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டநிலையில், அவ்வீரர்கள் மதுரையில் இருந்து இன்று (செப்.19) வழி அனுப்பி வைக்கப்பட்டனர். தாங்கள் விளையாட உள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி வாகை சூடுவோம் என அவர்கள் நம்பிக்கை தெரிவிததுள்ளனர்.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெறும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி வாரணாசி, ராஞ்சி, லக்னோ ஆகிய இடங்களில் செப்.24ஆம் தேதி தொடங்கி அக்.5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாரணாசியில் 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், ராஞ்சியில் 3 டி20 போட்டிகளும், லக்னோவில் மூன்று நாள் டெஸ்ட் போட்டியும் நடைபெறுகின்றன. இந்தப்போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து,
ஒரு நாள் போட்டிக்கு
1. சச்சின் சிவா (மதுரை)
2. லிங்கா ராஜ் (சிவகங்கை)
3. ராஜேஷ்குமார் (மதுரை)
டி20-க்கு
1. சச்சின் சிவா (மதுரை)