மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் மோகன். கட்டிட தொழிலாளியாக பணியாற்றிவரும் இவர் மீது பெட்ரோல் குண்டு வீசியது, அரசு பேருந்தை உடைத்தது, கொலை மற்றும் கொலை முயற்சி, கூட்டுச்சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுயேட்சையாக களமிறங்கும் கொலை குற்றவாளி..! - சுயேட்சை வேட்பாள
மதுரை: பல்வேறு குற்ற வழக்குகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மோகன் என்பவர், சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, மேல் குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள இவர், இதுவரை தான் எந்தப் பிரிவின் கீழும் தண்டனை பெறவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக நமது ETV பாரத்திற்கு தொலைபேசி வழியாக மோகன் அளித்த பேட்டியில், “என் மீது காவல்துறையினரால் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. மதுரை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் நான் தற்போது மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.