ரயில்வே ஊழியர்கள் பணியின்போது இறந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை தரப்படுகிறது. இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு இருந்து வந்த நிலையில், கடந்த 2012ஆம் 8 ஆம் வகுப்பு என தளர்வாக்கப்பட்டது. ஆனால், அவர்கள் ஐந்து ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். பெரும்பாலும் இந்த அடிப்படையில் வேலைக்கு வந்தவர்கள், தண்டவாள பராமரிப்பு வேலையில் ஈடுபடும் சாதாரண ஊழியர்கள் ஆவர்.
இந்நிலையில் தற்போது அத்தளர்வும் விலக்கிக் கொள்ளப்பட்டு, குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தான் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கருணை அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்ட பத்தாம் வகுப்புக்கு குறைவான கல்வித் தகுதி உடையவர்களுக்கு, மே மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் தேர்வாகவில்லை என்றால், அவர்கள் வேலை நீக்கம் செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.