மதுரை: சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சிக்கந்தர். டிக் டாக் பிரபலமான இவரது வீட்டிற்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி வந்த மற்றொரு டிக் டாக் பிரபலம் சூர்யா தேவி, சிக்கந்தரை செருப்பால் அடித்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சிக்கந்தர் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் சூர்யா தேவி, அவரது ஆண் நண்பர் ஆகியோர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் இருவரது மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சிக்கந்தரை தாக்கிய சூர்யா தேவி இந்நிலையில், புகார் குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில் தாமதமாகி வருவதால், தனது மீசையை மழிக்கப் போவதாக கூறிய சிக்கந்தர், அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
காவல் நிலையத்தில் புகார்
இந்த விவகாரங்கள் ஒருபுறம் இருக்க, திருச்சி மணப்பாறையிலுள்ள சூர்யா தேவி நேற்றைய தினம், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது குறித்தும் மணப்பாறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஆக.27) மதுரை, ஜெய்ஹிந்த் புரம் காவல் நிலையம் வந்த சிக்கந்தர், ரவுடி பேபி சூர்யா ஆகிய இருவரும் சூர்யா தேவி மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.
மேலும், சூர்யா தேவி மீது விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், காவல் ஆணையர், முதலமைச்சருக்கு புகார் அளிக்க உள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'சொடக்கு மேல சொடக்கு போடுது' - ரயில் நிலையத்தில் இளம்பெண் குத்தாட்டம்