தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

மதுரை உள்பட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Thunderstorms with heavy rain in parts of Tamilnadu
Thunderstorms with heavy rain in parts of Tamilnadu

By

Published : Jul 3, 2021, 10:37 AM IST

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அந்தப் பகுதிகள், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், ஈரோடு, விழுப்புரம், கடலூர் ஆகும்.

இது தவிர ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்

அதேபோல் நாளை (ஜூலை 4) சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்க கடல் பகுதிகளான மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் நாளை வரை மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஆகவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க : பருவமழை அடுத்த வாரம் தீவிரமடையும்- இந்திய வானிலை ஆய்வு மையம்!

ABOUT THE AUTHOR

...view details