தமிழ்நாடு

tamil nadu

குடிநீர் குழாய் உடைப்பு: ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிய அவலம்

By

Published : Dec 26, 2020, 11:28 AM IST

மதுரை: உசிலம்பட்டி அருகே கூட்டுக் குடிநீர்த்திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டடு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியது, தண்ணீர் 50 அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்ததால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி  அருகே கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டடு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டடு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடபட்டி பகுதியில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டது சேடபட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம். வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி வழியாக சேடபட்டி வரை குழாய்கள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் உசிலம்பட்டி அருகே தேனி ரோடு இருளாயி நகர் எதிரே உள்ள கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியது.

சுமார் 50 அடி உயரத்திற்குத் தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

உசிலம்பட்டி அருகே கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

விரைந்துவந்த உசிலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கூட்டுக் குடிநீர்த் திட்ட அலுவலர்களுக்குத் தகவல் அளித்த நிலையில் அவர்கள் வந்து நீரை நிறுத்தினாலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாகியதால் இரு தினங்களுக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஏரியின் மதகு உடைந்து 300 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கியது

ABOUT THE AUTHOR

...view details