ஏப்ரல் 16-ஆம் நாள் அதிகாலை 6 மணியளவில் மதுரை வைகையாற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீகள்ளழகர், அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் மதிச்சியம் ராமராயர் மண்டகப்படியில் நடைபெற்ற தீர்த்தவாரியில் கலந்து கொண்டார். பிறகு அன்றிரவு, வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கிய அழகர் நேற்று(ஏப்ரல்.17) காலை வைகையாற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.
பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணியளவில் மதிச்சியம் ராமராயர் மண்டகப்படிக்கு வந்து கள்ளழகர், அங்கு இரவு முழுவதும் தசாவதாரக் கோலங்களில் விடிய விடிய பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், வராக அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரங்களில் காட்சியளித்தார்.