தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முருகனின் முதல்படைவீட்டில் முத்தாய்ப்பாக நடந்த தெப்பத் திருவிழா! - திருப்பரங்குன்றம் தெப்பத் திருவிழா

மதுரை; முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா

By

Published : Feb 5, 2020, 2:57 PM IST

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவினையொட்டி முருகன் தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க குதிரை, அன்ன வாகனம், தங்க மயில் வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றைய முன்தினம் தெப்பமூட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முருகன் தெய்வானையுடன் பதினாறுகால் மண்டபத்தில் உள்ள சிறிய தேரில் எழுந்தருளினார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று உற்சவர் சன்னதியில் உள்ள முருகன் மற்றும் தெய்வானைக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சப்பரத்தில் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து தெப்பக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிதக்கும் தேரில் முருகன் மற்றும் தெய்வானை தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிதத்தனர்.

இதையும் படிங்க;

தலைவியாக மாறி கடல் அலையை முத்தமிட்ட கங்கனா!

ABOUT THE AUTHOR

...view details