தமிழ் மக்களின் சித்திரைத் திருநாளான தமிழ்ப் புத்தாண்டு என்றாலே ஒரு தனிச் சிறப்பு. அந்நாளில் மக்கள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.
பக்தர்களின்றி களையிழந்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்செய்கின்றனர். கரோனா பரவலைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, கிருமிநாசினி தெளித்த பின்பே கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஏப். 14) மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவித்து மூலவர்கள் கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஷ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக் கவசங்கள் சாத்துப்படி செய்யப்பட்டுள்ளது.
மேலும், புத்தாண்டு சிறப்பு பூஜை, பஞ்சாங்கம் வாசித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
இதையும் படிங்க: 'சித்திரைத் திருவிழாவுக்குத் தடை: மதுரை மல்லிகை விலை வீழ்ச்சி'