மதுரை:கர்நாடக மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஈஸ்வரப்பா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம்செய்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லை. இரு மாநில மக்களும் சகோதர, சகோதரிகளாக உள்ளனர். காவிரி விவகாரத்தில் அரசியல்வாதிகளால் அரசியல் செய்யப்படுகிறது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை இருதரப்பும் கடைப்பிடிக்க வேண்டும். காவிரி விவகாரம் அரசியல் பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது. சில நபர்கள் காவிரி விவகாரத்தில் வேண்டுமென்றே பிரச்சினையை உருவாக்குகின்றனர்.
தமிழ்நாடும், கர்நாடகமும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும். காவிரி தூய்மையாக உள்ளது. காவிரி தமிழ்நாட்டு உழவரையும், கர்நாடக உழவரையும் ஆசீர்வதிக்கும்" என்றார். மேகதாது அணை குறித்த கேள்விக்குப் பதில் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேரத் தலைவர் நியமனம்