தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை மயானங்களில் எரியூட்ட ஒரு மாதம் கட்டணம் கிடையாது - நிதியமைச்சர் - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: மதுரை மயானங்களில் எரியூட்ட ஒரு மாதம் கட்டணம் கிடையாது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

By

Published : Jun 3, 2021, 5:12 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்கள், பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பாக நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு முகாமை பார்வையிட்டனர்.

தொடர்ந்து பேட்டியளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் குடும்பத்தினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை மாநகராட்சி, மதுரை, சிவகங்கை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஆகியோருடன் இணைந்து தத்தனேரி மூலக்கரை மயானங்களில் ஒரு மாதத்திற்கு இலவசமாக எரியூட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று கூறினார்.இந்த முகாமில் மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூமிநாதன், நகர சுகாதார அலுவலர் குமரகுரு ஆகியோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details