தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வீட்டின்முன் நிறுத்தப்பட்டிருந்த கார் திருட்டு: சிசிடிவி காட்சிகள் மூலம் இருவர் கைது! - உசிலம்பட்டியில் திருட்டுபோன கார்மீட்பு

மதுரை: உசிலம்பட்டியில் வீட்டில் நிறுத்தப்பட்ட கார் திருடுபோன சம்பவத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து இருவரை காவல் துறையினர் கைதுசெய்து, மேலும் இருவரை தேடிவருகின்றனர்.

car theft
car theft

By

Published : Dec 16, 2020, 2:28 PM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எஸ்.ஓ.ஆர். நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த். இனோவா காரை வைத்து கிடைக்கும் வாடகைகளை வைத்து பிழைப்பு நடத்திவந்துள்ளார்.

வாடகைக்குச் சென்றுவிட்டு காரை வீட்டில் நிறுத்திவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த பிரசாந்த், வழக்கம்போல காரை வீட்டில் நிறுத்திவைத்திருந்த சூழலில் அடுத்தநாள் காலையில் கார் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டின்முன் நிறுத்தப்பட்டிருந்த கார் திருட்டு: சிசிடிவி காட்சிகள் மூலம் இருவர் கைது!
இது குறித்து அவர் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தேடிவந்த காவல் துறையினர், திண்டுக்கல் அருகே துவரங்குறிச்சியில் காரை பறிமுதல்செய்தனர்.
இந்தக் கார் கடத்தல் தொடர்பாக திண்டுக்கலைச் சேர்ந்த ஜான் ஜெபசீலன், அப்துல் முத்தலிப் என்ற இருவரை கைதுசெய்தும், மேலும் திண்டுக்கலைச் சேர்ந்த அமர்நாத், உசிலம்பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்ற இருவரை தேடியும்வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details