தமிழ்நாடு

tamil nadu

’சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை கோரி எம்பிக்கள் குரல் எழுப்ப வேண்டும்’

உச்ச நீதிமன்றக் கிளை சென்னையில் அமைய தமிழ்நாடு எம்பிக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

By

Published : Jul 30, 2021, 9:19 AM IST

Published : Jul 30, 2021, 9:19 AM IST

உச்ச நீதிமன்றக் கிளை சென்னையில் அமைய வேண்டும்
உச்ச நீதிமன்றக் கிளை சென்னையில் அமைய வேண்டும்

உச்ச நீதிமன்றத்தின் கிளை அமர்வு சென்னையில் அமைய வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்று (ஜூலை.29) அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டை மையமாக வைத்து கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய ஆறு தென் மாநிலங்களுக்கும் பொது இடமாக, சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும் என தொழில் வணிகத் துறையினர், பொதுமக்களின் சார்பில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தற்போது இந்தியாவிலுள்ள 133 கோடி மக்கள் தொகைக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் சேர்ந்து 34 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். மேலும் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 20 நீதிபதிகள் என்ற விகிதத்தில்தான் நீதிபதிகள் நியமனம் உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தற்போது சுமார் 68 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க குறைந்தது இன்னும் பத்து ஆண்டுகள் கூட ஆகலாம்.

எனவேதான்,

  • உச்ச நீதிமன்றக் கிளைகள் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அமைக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
  • உச்ச நீதிமன்றக் கிளைகளை அமைக்க பாராளுமன்ற நிலைக்குழு, சட்டக்குழு ஏற்கெனவே பரிந்துரை செய்தும் உள்ளது.

எனவே, தென் தமிழ்நாடு மக்களின் நீண்டநாள் கனவான உச்ச நீதிமன்றக் கிளை சென்னையில் அமைக்கப்படவும், நாடாளுமன்ற உறுப்பினரின் தனிநபர் மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெறும்போதும், தனிநபர் மசோதாக்கள் சட்டமாக மாற நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தின்போதும், தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் மத்திய ஒத்துழைப்பு தரவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'மத்திய அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 7இல் தொழிற்சங்கங்கள் போராட்டம்'

ABOUT THE AUTHOR

...view details