பிஆர்பி கிரானைட் பங்குதாரர் செந்தில்குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிரானைட் குவாரிகள் நடத்தி வருகிறோம். ஆனால், மதுரை மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் முறைகேடு நடைபெற்றதாக எங்கள் நிறுவனம் மீது 2012ஆம் ஆண்டு குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதன்பின், எங்கள் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யப்படும் கிரானைட்களை நிறுத்துமாறு சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கும், வங்கிக் கணக்குகளை முடக்குமாறு வங்கிகளுக்கும் டிஎஸ்பி கடிதம் அனுப்பினார். மதுரை மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் மட்டும் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், பிற மாவட்டங்களில் செயல்படும் குவாரிகளுக்கு இந்தக் கடிதம் பொருந்தாது.