மதுரை:மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று (ஜனவரி 16) காலை முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து வருகிறது. இதனை முதலமைச்சர், துணை முதலமைச்சரும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளையர்களுக்கு தண்ணீர் காட்டிய அமைச்சரின் காளை! - அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை, மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் நழுவிச் சென்றது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
காளையர்களுக்கு தண்ணீர் காட்டிய அமைச்சரின் காளை
விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த போட்டியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் கலந்து கொண்டன. முதல் சுற்றில் களமிறங்கிய இந்த காளைகள், மாடுபிடி வீரர்களின் பிடிக்குள் அடங்காமல் நழுவிச் சென்று பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
இதையும் படிங்க:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தயாராகிவரும் அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘கொம்பன்’ காளை!