தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உத்தரவு - Madurai Branch of the Chennai High Court

மதுரை: பிரபல வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு விசாரணையை மூன்று மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

lawyer kamaraj
lawyer kamaraj

By

Published : Apr 12, 2021, 12:00 PM IST

மறைந்த முன்னாள் அமைச்சர் தலித் ஏழுமலையின் மருமகனும் பிரபல வழக்கறிஞருமான காமராஜ் 2014ஆம் ஆண்டு கொலைசெய்யப்பட்டார். சென்னை ரெட்டேரி அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற இந்தக் கொலை வழக்கில் கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கு விசாரணை பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மொத்தமுள்ள 34 சாட்சிகளில் இதுவரை 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை மூன்று மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு நீதிபதி ஹேமலதா உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details