தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிணற்றில் விழுந்த மாடு - போராடி மீட்ட தீயணைப்பு துறையினர் - கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்புத் துறையினர் வெகுநேரம் போராடி மீட்டனர்.

மதுரை: கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்புத் துறையினர் வெகுநேரம் போராடி மீட்டனர்.

கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்புத் துறையினர் வெகுநேரம் போராடி மீட்டனர்
கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்புத் துறையினர் வெகுநேரம் போராடி மீட்டனர்

By

Published : May 9, 2020, 4:22 PM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ளது நிலையூர் கிராமம். இங்குள்ள மிகக்குறுகிய அகலமுள்ள கிணற்றில் எருமை மாடு ஒன்று தவறி விழுந்தது. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களோடு மாட்டின் உரிமையாளர் எவ்வளவோ முயன்றும் கிணற்றிலிருந்து மாட்டை மீட்க முடியவில்லை.

மீட்கப்பட்ட மாடு

இதனையடுத்து மதுரையிலுள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர். ஜேசிபி இயந்திரம் கல் உடைக்கும் இயந்திரம் கொண்டு எருமை மாட்டை மீட்கும் முயற்சி நடைபெற்றது. ஏறக்குறைய இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றுக்குள்ளிருந்த மாடு மீட்கப்பட்டு உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details