முசிறி அருகே உள்ள சிட்டிலரை பகுதியைச் சேர்ந்த டெல்லிகுமார் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
காவேரி ஆற்றின் உபரி நீரை வாய்க்கால் மூலம் கொண்டுசெல்ல கோரிய வழக்கு - Madurai HC Bench
மதுரை: காவேரி ஆற்றின் உபரி நீரினை முள்ளிப்பாடி ஏரியில் இருந்து சிட்டிலரை ஏரிக்கு வாய்க்கால்மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், பராமரிப்புப் பணி இருந்தால் நடவடிக்கை எடுக்க திருச்சி பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர்க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
முசிறி அருகே உள்ள சிட்டிலரை கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு, விவசாயிகளின் வாழ்வதாரம் செழிக்க திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் உள்ள முள்ளிப்பாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கு மழைக் காலங்களில் வரும் காவேரி உபரி நீரினை அந்த ஏரியில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவிலேயே உள்ள சிட்டிலரை ஏரிக்கு, வாய்க்கால் மூலம் கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருச்சி பொதுப்பணித் துறை நிர்வாக பொறியாளர், மனுதாரரின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, நீர் வரத்து வாய்க்காலில் ஏதும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியதிருந்தால், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.