மதுரை அவனியாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 53 பேருக்கு 2019ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கியூ பிராஞ்ச் போலீசார் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரியும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அரசு தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
போலி ஆவணங்கள் மூலம் இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கிய வழக்கு ஒத்திவைப்பு
போலி ஆவணங்கள் மூலம் இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கிய வழக்கு அக்டோபர் -28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கீழமை நீதிமன்றம் மூலமாக விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அந்த வகையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட 4ஆவது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பாக்யராஜ் முன்பாக இன்று(செப்.30) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் இளவரசன் மற்றும் மத்திய பாஸ்போர்ட் அதிகாரிகள், தபால் துறை அலுவலர்கள், போலியாக பாஸ்போர்ட் பெற்ற 20 பேர் உள்பட மொத்தம் 39 பேர் நேரில் ஆஜராகினர். அந்த 39 பேரிடமும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட பின் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது நிலஅபகரிப்பு வழக்கு; ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..