மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட எட்டு அரசு மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் இயங்கி வருகின்றன.
தீவிர சிகிச்சைப் பிரிவில் நிரம்பிவழியும் படுக்கைகள் - மாவட்ட நிர்வாகம் தகவல் - தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகள் நிரம்பியுள்ளன
மதுரை: அரசு ராசாசி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கான படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
icu
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஐசியு எனப்படும் தீவிர சிகிச்சை படுக்கைகள் 353 உள்ள நிலையில் அதில் 352 படுக்கைகள் நிரம்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.