மதுரை திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அத்தொகுதியின் அமமுக வேட்பாளர் மகேந்திரன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அப்போது அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது: தங்க தமிழ்ச்செல்வன் - அமமுக
மதுரை: மே 23ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் அதிமுக என்ற கட்சியே இருக்காது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
அதன்பிறகு செய்தியாளரிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், ”திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வெற்றி வாய்ப்பு மிக பிரமாதமாக இருக்கிறது. அதிமுகவினர் சொல்வதைப் போல இந்தத் தொகுதி அதிமுகவின் கோட்டைதான். ஆனால் இப்போது இல்லை. அதிமுக துரோகிகளின் கட்சியாக மாறிவிட்ட நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி அமமுகவின் கோட்டையாக மாறிவிட்டது.
வருகின்ற மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிமுக என்ற கட்சி இருக்காது. இன்று அதிமுகவின் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது நிறைய அமைச்சர்கள் வராததற்கு காரணம் அவர்களுக்குள் இருக்கின்ற உட்கட்சி பூசல்தான். இதனால் திருப்பரங்குன்றத்தில் அமமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்