டிடிவி தினகரனின் தளபதிகளில் ஒருவராக விளங்கிய தங்க தமிழ்ச்செல்வன் அவரை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
'ஏன் பெட்டிப்பாம்பாக அடங்க வேண்டும்?' -தங்க தமிழ்ச்செல்வன் - அமமுக
மதுரை: 'தினகரனைக் கண்டால் நான் ஏன் பெட்டிப்பாம்பாக அடங்க வேண்டும்?' என தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி, தங்க தமிழ்ச்செல்வனை நான் ஏற்கனவே எச்சரித்திருந்தேன். அவர் விஸ்வரூபம் எல்லாம் எடுக்கமாட்டார். என்னைக் கண்டால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் எனக் கூறினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “சம்பளம் கொடுத்து கட்சியில் வேலை வாங்குகிறார்களா என்ன? நான் ஏன் பெட்டிப்பாம்பாக அடங்க வேண்டும்? எந்தக் கட்சியிலும் சேர நான் விரும்பவில்லை; யாரும் என்னிடம் பேசவும் இல்லை. என்னை யாரும் இயக்கவும் இல்லை” என்றார்.