தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’மோடியின் திட்டங்கள் இந்தியாவை சாம்பலாக்குகிறது’ - மோடியை தாக்கும் தா பாண்டியன்

மதுரை: மோடியின் திட்டங்கள் தீபாவளி பட்டாசுபோல ஒரு நொடியில் இந்தியாவையே சாம்பலாக்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா. பாண்டியன் விமர்சித்துள்ளார்.

tha pandian

By

Published : Oct 17, 2019, 10:00 PM IST

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா. பாண்டியன், "மோடி அரசின் பொருளாதார நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை மேலும் கீழே இழுத்துச் செல்வதாக உள்ளது. மிகப்பெரிய தொழிற்சாலைகளிலும் கூட வேலைவாய்ப்பு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் பணம் என்பது நாட்டுக்கான பணம். ஆனால் அதனை மோடி அரசு பெற்றிருக்கிறது. அது குறித்து அவர் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

தீபாவளி பட்டாசு எப்படி ஒரு நொடியில் சாம்பலாகிவிடுமோ, அதேபோல மோடியின் திட்டங்கள் இந்தியாவையே சாம்பாலாக்குகிறது. பொருளாதார சீரழிவால் தற்கொலைகளும் அதிகரித்துள்ளன” என்றார்.

தா. பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு

சீமான் நாவடக்கத்தோடு பேச வேண்டும் என்று கூறிய அவர், கொலை செய்வதை நியாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார். சீமான் இதேபோல பேசிவந்தால் ஈழம்போல தமிழ்நாட்டிலும் சகோதர படுகொலைகள் ஏற்படும் அபாயம் உருவாகும் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க: இயக்குநர் வெற்றிமாறன் மீதான தேச துரோக வழக்கு: யார் இந்த ஏபி சாஹி?

ABOUT THE AUTHOR

...view details