மதுரை மாவட்டம் உத்தங்குடியைச் சேர்ந்தவர் மார்நாடு மகள் உமா (24). இவர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார்.
அதில், 'நான் கொத்தவால் சாவடி சந்து பகுதியிலுள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறேன். நான் வேலை பார்க்கும் கடை உரிமையாளருக்கும், அருகிலுள்ள கடை உரிமையாளருக்கும் இடையே தொழில், வியாபாரப் போட்டி இருந்துள்ளது.
சம்பவத்தன்று காலை கடையில் இருந்தேன். அப்போது அருகிலுள்ள ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜ்தீப் என்பவரது மகள் சோனம் என்பவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்தார். நான் அவரிடம் 'என்ன வேண்டும்?' என்று கேட்டேன். அப்போது சோனம் என்னை சரமாரியாக தாக்கிவிட்டுச் சென்றார்.
கடை ஊழியரைத் தாக்கிய பெண்
அவர் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த விளக்குத்தூண் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக கடையில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், ஜவுளிக் கடைக்குள் நுழையும் இளம்பெண் அங்கிருந்த பெண் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக தாக்குகிறார். இதில் கடை ஊழியர் நிலைதடுமாறி கீழே விழுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
இந்தக் காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர், தாக்குதல் நடத்திய பெண்ணிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:பச்சிளம் குழந்தை கடத்தல் - சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை