மதுரையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கடந்த 1977-78ஆம் ஆண்டு நெல்லை, மூலகரைப்பட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி கொண்டிருந்தபோது, சிறப்பு பணியாக சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் பணியாற்றினேன்.
அப்போது சிலை கடதல் தொடர்பாக 14 பேரை கைது செய்தோம். கடத்தப்பட்ட சிலைகளை அந்த அந்த கோவில்களில் உயர் அலுவலர்கள் முன்னிலையில் ஒப்படைத்தோம். இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு காவல் ஆய்வளாராக பணி ஓய்வு பெற்றேன்.
கோயில் சிலை கடத்தல் வழக்கு: முன்னாள் காவல் ஆய்வாளர் ஆஜராக உத்தரவு - முன்னாள் காவல் ஆய்வாளர் ஆஜராக உத்தரவு
மதுரை: கோயில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் காவலர் ஆய்வாளர் ஆஜராகக் கோரி நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் எனது குலதெய்வ கோயிலில் சில பழங்காலத்து சிலைகள் வைத்துள்ளேன். இதை காரணமாக காட்டி என்மீது கோயில் சிலைகளை கடத்தியதாக சிலை கடத்தல் பிரிவில் பொய் வழக்குகள் பதியப்பட்டது
இந்த வழக்கிற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே இந்த வழக்கில் சிலை தடுப்பு காவல்துறை என்னை கைது செய்ய தடை விதித்து, எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதி, மனுதாரர் பாலசுப்ரமணியன் மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைகாக வருகிற 27ஆம் தேதி காலை 10 மணி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கு ஜனவரி 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதாக வழக்கு - ஆட்சியருக்கு உத்தரவு