தேனி மாவட்டம் பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகன் நாகமுத்து, கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் அர்ச்சகராக பணிபுரிந்தார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உள்பட பலர் மீது தென்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பவத்தின் போது மாவட்ட துணை கண்காணிபாளர்களாக பணிபுரிந்த உமாமகேஸ்வரி, சேது மற்றும் ஆய்வாளர்கள் இளங்கோவன், செல்லப்பாண்டியன் ஆகியோரை குற்றவாளியாக சேர்க்கக் கோரி தற்கொலை செய்து கொண்ட பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.