தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

லுக் அவுட், ரெட் கார்னர் இப்படியெல்லாம் சொல்றாங்களே! அப்படினா என்ன? - லுக் அவுட் நோட்டீஸ்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, தமிழ்நாடு காவல் துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளது. லுக் அவுட், பிளாக் லுக் அவுட், ரெட் கார்னர், புளு கார்னர் நோட்டீஸ் என்றால் என்ன? என்பது பற்றி காணலாம்.

லுக் அவுட் நோட்டீஸ் யாருக்கு விடுக்கப்படும்
லுக் அவுட் நோட்டீஸ் யாருக்கு விடுக்கப்படும்

By

Published : Dec 23, 2021, 6:43 PM IST

மதுரை:குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபரொருவர் காவல் துறையால் தேடப்படுகிறார் என்றால் அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகக் காவலர்களால் எடுக்கப்படுவதுதான் இந்த லுக் அவுட் நோட்டீஸ்.

லுக் அவுட்

இது நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அறிவிப்பாக காவல் துறையால் அனுப்பிவைக்கப்படும். இந்த லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்ட நபர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தார் எனில் அங்கு அவர் கைதுசெய்யப்படுவார்.

காவல் துறையினரின் கழுகுப் பார்வையிலிருந்து அவர் ஒருபோதும் தப்பிக்க இயலாது. பொதுவாக இந்த லுக் அவுட் நோட்டீஸ் LOC என்று சுருக்கமாகக் காவல் துறையால் அழைக்கப்படும்.

ரெட் கார்னர்

ஒருவேளை அக்குறிப்பிட்ட நபர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டால், அக்குறிப்பிட்ட நாட்டிலிருந்து குற்றவாளியின் விவரங்களைப் பெறுவதற்கும், அவர் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டறிவதற்கும் ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்படும்.

பிளாக் நோட்டீஸ்

அதேபோன்று பன்னாட்டு அளவில் ஏதேனும் ஒரு நாட்டில் ஒரு நபர் இறந்துபோன பின்னர் அந்த உடலை அடையாளம் காண்பதற்கு இன்டர்போல் என்னும் பன்னாட்டு காவல் துறை சார்பாக பிளாக் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்படுகிறது.

புளு கார்னர்

குற்றச்செயலில் ஈடுபட்ட ஒரு நபர் குறித்த அடையாளம், அவர் வாழ்கின்ற இடம் அவருடைய தொடர் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கண்காணிக்கவும், அக்குறிப்பிட்ட நாட்டிடமிருந்து கூடுதல் தகவல்களைப் பெறுவதற்கும் பன்னாட்டு காவல் துறையால் புளு கார்னர் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்படுகிறது.

ராஜேந்திர பாலாஜிக்கு லுக் அவுட்

இதன் அடிப்படையில்தான் அதிமுகவைச் சேர்ந்த பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ் தற்போது தமிழ்நாடு காவல் துறையால், விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மஞ்சப்பை சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம் - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details