தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் விபத்து - accident in madurai airport

தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் மதுரை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.

radhakrishnan car accident
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் விபத்து

By

Published : Dec 2, 2021, 1:10 PM IST

மதுரை: ஒமைக்ரான் வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் விமான நிலையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன் தாமதமாக புறப்பட்டார்.

இந்நிலையில் கார் வேகமாகச் சென்ற போது மதுரை விமான நிலைய தடுப்புக் கம்பியில் கார் மோதியது. இவ்விபத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் காயமின்றி தப்பினார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் விபத்து

இதனையடுத்து மதுரை மக்கள் தொடர்பு அலுவலரின் கார் மூலமாக மீண்டும் தனது பயணத்தை அவர் தொடங்கினார். இச்சம்பவத்தால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details