தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனிக்குச் சென்று தனது வாக்கினை பதிவு செய்யவுள்ளார்.
மதுரை விமான நிலையத்திற்கு வந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பொதுமக்கள் அதிமுக வேட்பாளர்களை வெகுவாக ஆதரித்து வருகிறார்கள்.