தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்தியத் தொல்லியல் துறை அறிவிப்பில் சந்தேகம் - மதுரை எம்பி - Madurai MP

மதுரை: இந்தியத் தொல்லியல் துறையின் அறிவிப்பில் கல்வெட்டு ஆய்வுக்கான புதிய பணியிடங்கள் இல்லாதது சந்தேகம் அளிக்கிறது என மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏஎஸ்ஐ அறிவிப்பில் சந்தேகம் - நாடாளுமன்ற எம்பி
ஏஎஸ்ஐ அறிவிப்பில் சந்தேகம் - நாடாளுமன்ற எம்பி

By

Published : Jun 8, 2021, 11:25 PM IST

ஏஎஸ்ஐ என்று அழைக்கப்படும் இந்தியத் தொல்லியல் துறை புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் கல்வெட்டு ஆய்வுக்கான பணியிடங்கள் குறித்த அறிவிப்பு இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் இது குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏஎஸ்ஐ அறிவிப்பில் சந்தேகம் - நாடாளுமன்ற எம்பி

அதில், "இந்தியத் தொல்லியல் துறை புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் கல்வெட்டு ஆய்வுக்கான புதிய பணியிடங்கள் இல்லை. 70 விழுக்காட்டிற்கும் மேல் கல்வெட்டுகள் திராவிட மொழிகளில் இருப்பதால் புறக்கணிக்கப்படுகின்றனவா என்ற ஐயம் எழுகிறது. எனவே ASI இம்முடிவினை மறுபரிசீலனை செய்க!" என வலியுறுத்தியுள்ளார்.

ஏஎஸ்ஐ அறிவிப்பில் சந்தேகம் - நாடாளுமன்ற எம்பி

ABOUT THE AUTHOR

...view details