பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு கால்நடை துறை சார்பில் ஜல்லிக்கட்டு காளைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பணி ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறும்.
அந்தந்த பகுதிக்கு உட்பட்ட கால்நடை மருத்துவமனைகளில் நடைபெறும் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஜல்லிக்கட்டு காளைகளின் இனம், உயரம், கொம்பின் இடைவெளி, வயது ஆகியவை குறித்த தகவல்களும் காளைகளின் புகைப்படமும் காளைகளின் உரிமையாளர்கள் குறித்த விவரமும் இணையம் மூலமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்று வரும் கணக்கெடுக்கும் பணியில் காளைகளின் உரிமையாளர்கள் தங்களுடைய காளைகளுடன் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்.