இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கரோனா வழிகாட்டு நெறிமுறையில், ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மைய வளாகத்தில் ஆதியோகி சிலை தமிழ்நாட்டின் அடையாளமாக வைக்கப்பட்டு புகைப்படம் வெளியானது. இதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் ட்விட்டரில் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.
'இனி தவறியும் தவறிழைக்காதீர்கள்' இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு எம்.பி. சு.வெங்கடேசன் அறிவுறுத்தல்! - Su Venkatesan welcomes AIRPORTS AUTHORITY OF INDIA
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கரோனா வழிகாட்டு நெறிமுறையில் இடம்பெற்றிருந்த ஆதியோகி சிலையை நீக்கிவிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் மாற்றப்பட்டதுக்கு சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார்.
இதையடுத்து சில மணிநேரங்களில் அந்தப் புகைப்படம் நீக்கப்பட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் மாற்றப்பட்டது. இதை எம்.பி. சு வெங்கடேசன் வரவேற்றுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மைய வளாகத்திலுள்ள ஆதியோகி சிலையைப் பயன்படுத்தி இருந்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம், அதனை நீக்கி உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரத்தை வெளியிட்டுள்ளது. அதை வரவேற்கிறேன். இனி தவறியும் இது போன்ற தவறினை இழைக்காதீர்கள்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஆதியோகி சிலை தமிழ்நாட்டின் அடையாளமா? - சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்
TAGGED:
சு வெங்கடேசன் ட்வீட்