இதுகுறித்து அவர் கூறுகையில், ”மதுரையின் வரலாறு, வளர்ச்சி, நவீனம் என்பதுதான் எங்களின் முக்கிய குறிக்கோள். தேர்தலில் வெற்றி பெற்றால் மதுரையை பாரம்பரிய பெருமைமிக்க நகராக யுனெஸ்கோ மூலம் அறிவிக்க முயற்சிகளை மேற்கொள்வேன். வளர்ச்சி சார்ந்த திட்டங்களைப் பொறுத்தவரை மதுரையை பாரம்பரிய முக்கிய நகராக அறிவிப்பதே ஒரு வளர்ச்சிக்குரிய திட்டம்தான்.
’எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முயற்சி மேற்கொள்வோம்’ - மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன் - மார்க்சிஸ்ட் கட்சி
மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் வெறும் பேச்சளவில் இருக்கும் சூழலில் அதனை நிறைவேற்ற நாங்கள் முயற்சி மேற்கொள்வோம் என மதுரை மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் ஈடிவி பாரத்துக்கு (E tv Bharat) பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
மத்திய அரசு சார்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மதுரையில் இல்லை அவற்றைக் கொண்டுவருவதற்கு நாங்கள் முயற்சி மேற்கொள்வோம். மேலும், தென் மாவட்டங்களின் உடல் நலத்திற்கு மிக முக்கிய பங்கு அளிக்கக்கூடிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் வெறும் பேச்சளவில்தான் இருக்கிறது. அதனை நிறைவேற்ற நாங்கள் முயற்சி மேற்கொள்வோம். குறிப்பாக, மதுரை ராஜாஜி மருத்துவமனை போன்று பல்வேறு மருத்துவமனைகள் உருவாக வேண்டும். பத்து நிமிட கால தாமதத்தில் எத்தனை உயிர்கள் பலியாகின்றன அது போன்ற நிலை வரக்கூடாது என்பதில் நான் உறுதி காட்டுவேன்” என்றார்.