தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பீட்ரூட் சாறு மூலம் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்... மதுரை மாணவி அசத்தல்...

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை பீட்ரூட் சாறு மூலம் கதர் ஆடையில் கல்லூரி மாணவி வரைந்து கவனத்தை ஈர்த்துள்ளது.

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை பீட்ரூட் சாறு மூலம் ஓவியம் தீட்டிய மாணவி
பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை பீட்ரூட் சாறு மூலம் ஓவியம் தீட்டிய மாணவி

By

Published : Oct 1, 2022, 5:47 PM IST

மதுரை:மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கீர்த்திகா ஃபேஷன் டிசைனிங் துறையில் பயின்று வருகிறார். இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களின் முகங்களை கதர் ஆடையில் பீட்ரூட் சாறில் சர்க்கரை கரைசல் கொண்டு வரைந்துள்ளார்.

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை பீட்ரூட் சாறு மூலம் ஓவியம் தீட்டிய மாணவி

ஒரே துணியில் 16 கதாபாத்திரங்களை உள்ளடக்கி வரையப்பட்ட இந்த ஓவியத்தை, செல்லூர் பகுதியில் பொன்னியின் செல்வன் படம் திரையிடப்பட்டிருந்த திரையரங்கில் காட்சிப்படுத்தியிருந்தார். அது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சோழர்கள் ஆட்சி வளம்மிக்கதாக இருந்ததையும், ஓலை மற்றும் துணி மூலம் தகவல் பரிமாற்றம் நிகழ்ந்ததை நினைவூட்டும் வகையிலும் இயற்கை முறையில் இந்த ஓவியம் வரையப்பட்டதாகவும் மாணவி கீர்த்திகா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:"பராசக்தி ஹீரோ" - சிவாஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details