தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கந்துவட்டி குற்றத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் - Finance Minister PTR Palanivel thiagarajan

மதுரை: கந்துவட்டி நெருக்கடி என்பது கொடுமையான செயல் எனவும், உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கந்துவட்டி குற்றத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
கந்துவட்டி குற்றத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

By

Published : Jun 15, 2021, 9:51 PM IST

தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு தவணையாக வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், இரண்டாவது தவணைக்கான இரண்டாயிரம் ரூபாய், 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தானப்ப முதலியார் தெருவில் உள்ள நியாய விலைக் கடையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “தமிழ்நாடு அரசு தேர்தலின்போது வாக்குறுதியாக ஜூன் மாதத்திற்குள் 4000 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்ததை தற்போது செயல்படுத்தியுள்ளது.
இதற்காக மொத்தமாக 9,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது இரண்டாவது தவணையாக அரிசி அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது” என்றார்
மதுரையில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது குறித்த கேள்விக்கு, கந்துவட்டி பிரச்சினையில் தவறு கண்டறியப்பட்டால் அந்தக் கொடுஞ்செயலுக்காகச் சம்பந்தப்பட்டவர்கள்மீது உரிய விசாரணை நடத்தி உண்மையெனில் கடுமையான நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details