தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கபடி வீரர்களை சிறப்பிக்கும் சிலை! - அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைப்பு! - கபடி வீரர்கள் சிலை

மதுரை: மாநகராட்சி சார்பில் செல்லூர் ரவுண்டானாவில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கபடி வீரர்களைக் பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட சிலையை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார்.

sellur raju
sellur raju

By

Published : Feb 20, 2021, 1:38 PM IST

Updated : Feb 20, 2021, 3:50 PM IST

பழம்பெரும் நகரான மதுரையின் சிறப்பை விளக்கும் வகையில், நகரின் முக்கிய சந்திப்புகளில் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு பெருமையை விளக்கும் வகையில் ஆரப்பாளையம் சந்திப்பில் ஜல்லிக்கட்டு காளையும், மதுரையின் பெருமையான தேர்த்திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஃபாத்திமா கல்லூரி சந்திப்பில் மீனாட்சியம்மன் தேரும், பழங்காநத்தம் சந்திப்பில் பத்துத் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று உலக நாடுகளின் வரவேற்பைப் பெற்ற சடுகுடு போட்டி என்று அழைக்கக்கூடிய கபடி வீரர்களின் பெருமையைப் போற்றும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை செல்லூர் பகுதியில் உள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்கள் சிலை ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இச்சிலைகளை இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:சூலூர் விமானப்படை தளத்தில் போர் விமான சாகச நிகழ்ச்சி

Last Updated : Feb 20, 2021, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details