தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாகர்கோவில் - கச்சிக்குடா ரயில் சேவை ஜூலை 2 முதல் மீண்டும் தொடக்கம் - நாகர்கோவில் கச்சிக்குடா ரயில் சேவை ஜூலை 2இல் தொடக்கம்

நாகர்கோவிலில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிக்குடா வரை வருகின்ற ஜூலை 2ஆம் தேதி முதல் மீண்டும் ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.

நாகர்கோவில் - கச்சிக்குடா ரயில் சேவை
நாகர்கோவில் - கச்சிக்குடா ரயில் சேவை

By

Published : Jun 19, 2022, 5:36 PM IST

மதுரை:நாகர்கோவில் - கச்சிக்குடா வாராந்திர விரைவு ரயில் சேவை மீண்டும் ஜூலை 2 முதல் தொடங்க இருக்கிறது. கச்சிக்குடாவிலிருந்து முதல் சேவை ஜூலை 3 அன்று தொடங்கும். அதன்படி நாகர்கோவில் - கச்சிக்குடா வாராந்திர விரைவு ரயில் (16354) நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 08.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.25 மணிக்கு கச்சிக்குடா சென்று சேரும். இந்த ரயில் மதுரையில் இருந்து மதியம் 01.15 மணிக்கு புறப்படும்.

மறுமார்க்கத்தில் கச்சிக்குடா - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (16353) கச்சிக்குடாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 03.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 07.50 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயில் மதுரையில் இருந்து மதியம் 02.15 மணிக்கு புறப்படும். வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, தாடிபத்திரி, கூட்டி, கர்னூல்நகர், கட்வால், மெஹபூப் நகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிக்கான பெட்டி, ஒரு சமையல் சாதனப்பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஹிட்டாச்சி வாகனத்தை இயக்கும் இரண்டரை வயது சிறுவனின் செயல் ஏற்புடையதா?

ABOUT THE AUTHOR

...view details