வாடிப்பட்டி மாதா கோவில் பகுதியில், இலங்கையைச் சேர்ந்த நபர் சுற்றித்திரிவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், அந்த நபரைப் பிடித்து நடத்திய விசாரணையில் அவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராசையா மகன் ஆனந்தராசா(31) என்பது தெரியவந்தது. மேலும், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), நுழைவு சான்று(விசா) உள்ளிட்ட எவ்வித ஆவணங்களுமின்றி இந்தியாவுக்குள் அவர் நுழைந்துள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த நபரைக் கைது செய்த காவல்துறையினர், வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஆவணங்கள் இன்றி சாலையில் சுற்றிதிரிந்த இலங்கை நபர் யார்? - ஆவணங்கள் இன்றி சாலையில்
மதுரை: வாடிப்பட்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிந்த இலங்கை நபரை கைது செய்த கியூ பிரிவு காவல்துறையினர் அவரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
detained in madurai
பின்னர் இதுகுறித்து மதுரை க்யு பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக வாடிப்பட்டி காவல் நிலையம் வந்த க்யூ பிரிவு காவல்துறையினர், இலங்கை வாலிபர் ஏதேனும் சதி வேலை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளாரா எனத் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் தொடர் வெடிகுண்டு வெடிப்புக்குப் பின் இலங்கையைச் சேர்ந்த நபர் மதுரை வாடிப்பட்டியில் பிடிபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.