மதுரை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது மீனாட்சி அம்மன் கோயில்தான். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கோயிலின் சித்திரை திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அந்த வகையில், இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா இன்று மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு முத்து கண்ணன் தலைமையில், இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் மதுரை, திண்டுக்கல் உட்பட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இன்று முதல் 10 நாட்களும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை ஒவ்வொரு அலங்காரத்தில் வலம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.