தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ் புத்தாண்டையொட்டி தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்! - நாகர்கோவில்-தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில்

தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே ஏப்.13ஆம் தேதியன்று முதல் தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் ஏற்பாடு செய்துள்ளது.

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே

By

Published : Mar 29, 2022, 6:44 PM IST

மதுரை:தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில் பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே (Southern Railway) ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த தகவலின்படி, தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06005) ஏப்.13ஆம் தேதியன்று புதன் கிழமை அன்று இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.35 மணிக்கு மதுரை வந்து சேரும். பின்பு மதுரையிலிருந்து அதிகாலை 05.40 மணிக்கு புறப்பட்டு காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

சிறப்பு ரயில்:மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06006) நாகர்கோவிலில் இருந்து ஏப்.17 ஞாயிறு அன்று மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு இரவு 09.00 மணிக்கு மதுரை வந்து சேரும். மதுரையிலிருந்து இரவு 09.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 காப்பாளர் பெட்டியுடன் இணைந்த மாற்றுத் திறனாளிகள் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் - அரசுக்கு இத்தனை கோடி இழப்பா?

ABOUT THE AUTHOR

...view details