தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வனவிலங்கு குற்றங்களை தடுக்க சிறப்பு நீதிமன்றம்! - வனத்துறைக்கு உத்தரவு! - வனவிலங்கு சரணாலயங்கள்

மதுரை: தமிழ்நாட்டில் வனவிலங்கு குற்றவியல் நிலுவை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோரிய வழக்கில் வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

animals
animals

By

Published : Feb 12, 2021, 6:24 PM IST

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "30.92% காடுகள் நிறைந்த தமிழ்நாட்டில், 5 தேசிய பூங்காக்களும், 15 வனவிலங்கு சரணாலயங்களும், 15 பறவைகள் சரணாலயங்களும், 4 புலிகள் வசிக்கும் பகுதிகளும் உள்ளன. இவற்றில் தோல், நகம், தந்தம், பல் போன்றவைகளுக்காக விலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

2011 முதல் 2019 வரை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், 19,942 வழக்குகள் விலங்குகளில் பாகங்கள் கடத்தப்பட்டதாக பதியப்பட்டுள்ளன. இதில் பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. எனவே தேசிய வனவிலங்கு செயல் திட்டம் 2017 - 2035ஐ, அமல் படுத்துவதன் மூலம், சட்டவிரோத வனவிலங்கு கடத்தல் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். ஆனால், இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, வனவிலங்கு குற்றங்களை தடுக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, வனவிலங்கு குற்றவியல் சம்பந்தமாக எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து, தமிழ்நாடு வனத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியில் தூய்மையை பேண பெருமுயற்சி எடுத்த 1500 பேருக்கு இணைய சான்றிதழ்

ABOUT THE AUTHOR

...view details