தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிறிஸ்துமஸ் பண்டிகை கால சிறப்பு ரயில்கள்: மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு - சிறப்பு ரயில்கள் முன்பதிவு

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நாகர்கோவில், சென்னை, தாம்பரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் ஏற்பாடுசெய்துள்ளது.

SOUTHERN RAILWAY MADURAI DIVISION, SPECIAL TRAINS FOR CHRISTMAS, சிறப்பு ரயில்கள் அறிவிப்பு, கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்கள்
SOUTHERN RAILWAY MADURAI DIVISION SPECIAL TRAINS FOR CHRISTMAS

By

Published : Nov 28, 2021, 6:09 AM IST

மதுரை: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நாகர்கோவில், சென்னை, தாம்பரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து மதுரை ரயில்வே கோட்டம் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், "கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் - சென்னை, தாம்பரம் இடையே சிறப்பு கட்டண சிறப்பு முன்பதிவு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடுசெய்துள்ளது.

சிறப்பு ரயில்கள்

அதன்படி, வண்டி எண் 06005 சென்னை - நாகர்கோவில் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் சென்னை எழும்பூரிலிருந்து டிசம்பர் 23 அன்று மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (டிசம்பர் 24) அதிகாலை 4.20 நாகர்கோவில் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06006 நாகர்கோவில் - சென்னை சிறப்பு கட்டண சிறப்பு ரயில் டிசம்பர் 24 அன்று மாலை 3.10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் (டிசம்பர் 25) அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

ரயில் நிற்கும் இடங்கள்

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு, இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, மூன்று குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு இருக்கை, மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும். நாகர்கோவில் - சென்னை சிறப்பு ரயில் மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்றுசெல்லும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பொறுத்தருள்க, இனி இவ்வாறு நிகழாது' - அமைச்சர் கே.என்.நேரு வருத்தம்

ABOUT THE AUTHOR

...view details