தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரயில்வே தேர்வு குளறுபடி - விண்ணப்பதாரர் கருத்து கேட்பு முகாம் அறிவிப்பு - ரயில்வே தேர்வு குளறுபடி

அண்மையில் நடைபெற்று முடிந்த ரயில்வே பணிக்கான உதவியாளர் தேர்வு முடிவுகள் குறித்து தங்களது குறைபாடுகளை தெரிவிக்க விண்ணப்பதாரர் கருத்து கேட்பு முகாம் நடைபெறுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே தேர்வு குளறுபடி
ரயில்வே தேர்வு குளறுபடி

By

Published : Jan 29, 2022, 12:40 AM IST

அண்மையில் ரயில்வே உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து சில குறைபாடுகளை விண்ணப்பதாரர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதுபற்றி விசாரிக்க உயர்மட்ட குழு ஒன்றை ரயில்வே வாரியம் அமைத்துள்ளது.

சமீபத்திய தேர்வு முடிவுகள், விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய கையாளப்பட்ட முறை, இரண்டாம் கட்ட தேர்வு ஆகியவை குறித்து இந்த குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இது தொடர்பாக ரயில்வே உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் கருத்துகளை அறிவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தேர்வு சம்பந்தமான கருத்துக்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை ரயில்வே தேர்வாணைய இணையதளத்தில் உள்ள www.iroams.com/outreach இணைய முகவரியில் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 16 வரை விண்ணப்பதாரர்கள் பதிவிடலாம். மேலும் உதவிச் செயலாளர், ரயில்வே பணியாளர் தேர்வாணையம், எண் 5, டாக்டர் பி. வி. செரியன் கிரசன்ட் சாலை, எத்திராஜ் கல்லூரி பின்புறம், எழும்பூர், சென்னை - 600008 என்ற முகவரிக்கும் அனுப்பலாம் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கைப்பேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு

ABOUT THE AUTHOR

...view details